இப்போது நீதித்துறையில் அரசியல் தலையீடில்லை: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 July 2018

இப்போது நீதித்துறையில் அரசியல் தலையீடில்லை: மைத்ரி!


தமது ஆட்சியின் கீழ் நீதித்துறை அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக இயங்குவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


நீதித்துறை, லஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை எந்தவொரு அரசியல் தலையீடின்றி இயங்குவதாகவும் அதனால் நாட்டில் நீதி தங்கு தடையின்றி நிலை நாட்டப்படுவதாகவும் ஜோர்ஜியாவில் வைத்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்த ஆட்சியின் ஊழல் விவகாரங்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென மக்கள் அங்கலாய்த்து வருகின்றமையும் அதற்குத் தடையாக இருந்ததாகக் கூறி விஜேதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment