நிறைவேற்று அதிகார நீக்கம்; மஹிந்தவும் ஒத்துழைப்பார்: JVP - sonakar.com

Post Top Ad

Monday 30 April 2018

நிறைவேற்று அதிகார நீக்கம்; மஹிந்தவும் ஒத்துழைப்பார்: JVP




நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான தனி நபர் பிரேரரணையை ஜே.வி.பி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கு மஹிந்த ராஜபக்சவும் ஆதரவளிப்பார் என அக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


இரு முறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த மஹிந்த ராஜபக்ச, வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு தேர்தலில் தோல்வியுற்றார். 18ம் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பின்னர் மைத்ரி அலை பெருகிய போது தாம் தவறிழைத்து விட்டதாகவும் தெரிவித்துக் கொண்டது.

இந்நிலையில், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றக் காத்திருக்கும் மஹிந்த ராஜபக்சவும் தமது முயற்சிக்குக் கை கொடுப்பார் என ஜே.வி.பி. எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment