சிரியா தாக்குதல் 'வெற்றி'; அடித்து முடித்து விட்டோம்: ட்ரம்ப்! - sonakar.com

Post Top Ad

Saturday, 14 April 2018

சிரியா தாக்குதல் 'வெற்றி'; அடித்து முடித்து விட்டோம்: ட்ரம்ப்!


அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் இணைந்து சிரியா மீது நடாத்திய வான் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாகவும் தாக்குதலை நடாத்தி முடித்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.இரசாயன ஆயுத தொழிற்சாலை மற்றும் களஞ்சியம் என மேற்குநாடுகளால் அடையாளப்படுத்தப்படும் மூன்று நிலைகள் மீது சமார் 105 கனரக ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தாக்குதலுக்கான திட்டம் வெற்றியளித்திருப்பதாகவும் சிரியாவின் இரசாயன ஆயுத வல்லமை பல வருடங்களுக்கு பின் தள்ளப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலைப் புறக்கணித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து ரஷ்யா அதிருப்தி வெளியிட்டிருப்பதுடன் அவசரமாக இது குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment