வாகனங்களில் பொருட்கள் திருடும் கொள்ளைக் கூட்டம் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 8 April 2018

வாகனங்களில் பொருட்கள் திருடும் கொள்ளைக் கூட்டம் கைது!


தம்புள்ள, குருநாகலை, மாத்தளை, கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை உடைத்து உள்ளிருக்கக் கூடிய பெறுமதியான பொருட்களைத் திருடிச் செல்லும் கொள்ளைக் கூட்டம் ஒன்று தம்புள்ளயில் இன்று சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


கைத்தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை இவ்வாறு திருடிச் செல்லும் இக்கூட்டம் நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறான திருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன் தம்புள்ளயில் சிசிர வத்த பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்துள்ளது.

இந்நிலையில், தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த கொள்ளைக் கூட்டத்தை சுற்றி வளைத்துப் பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment