செயலாளர் பதவிக்கு நவின் திசாநாயக்க; கட்சி மட்டத்தில் பெருகும் ஆதரவு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 April 2018

செயலாளர் பதவிக்கு நவின் திசாநாயக்க; கட்சி மட்டத்தில் பெருகும் ஆதரவு!


ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்ளவதாக அமைச்சர் கபிர் ஹாஷிம் அறிவித்துள்ள நிலையில் புதிய செயலாளராக நவின் திசாநாயக்க பொறுப்பேற்க வேண்டும் என கட்சி மட்டத்தில் ஆதரவு பெருகி வருகிறது.


கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் தலைமைத்துவ கவுன்சில் போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் தலைவராக இருப்பார் என ஏலவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இக்குழு நியமனத்தின் போதும் நவின் திசாநாயக்கவுக்கே அதிகப்படியான ஆதரவு கிடைத்துள்ள நிலையில் செயலாளர் பதவிக்கு நவின் திசாநாயக்கவின் பெயர் பெருவாரியாக பிரேரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment