நேற்றிருந்த 'ஹக்கீம்' இன்றில்லை: சபையில் விமல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 April 2018

நேற்றிருந்த 'ஹக்கீம்' இன்றில்லை: சபையில் விமல்!


நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நேற்றைய தினம் வரை பேசித் திரிந்த ரவுப் ஹக்கீமை இன்று காண முடியவில்லையென சபையில் வைத்து தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.


ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கே ஆளுக்கு 5 கோடி ரூபா கொடுக்கும் தேவையேற்பட்டிருந்த நிலையில் நேற்றிருந்த ஹக்கீமை இன்று வேறு மாதிரி மாற்றுவதற்கும் ரிசாத் பதியுதீனின் கட்சியில் நிலவி வந்த குழப்பத்தை தீர்த்து ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கும் ரணிலுக்கு மேலும் செலவாகியிருக்கும் எனவும் விமல் தெரிவிக்கிறார்.

இன்றிரவு 9.30 அளவில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment