சண்முகா விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் 'அயுப் அஸ்மின்'! - sonakar.com

Post Top Ad

Sunday 29 April 2018

சண்முகா விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் 'அயுப் அஸ்மின்'!


திருகோணமலை சண்முகா இந்துக் மகளிர் கல்லூரி விவகாரத்தில் தனது கட்சி சார்பில் கருத்துரைத்து மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  வழங்கிய ஆசனம் மூலம் மாகாண சபை உறுப்பினரான அயுப் அஸ்மின்.



இந்துக் கல்லூரியொன்றில் முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டிய அவசியமில்லையென தெரிவித்துள்ள அவர், பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் ஒரு இனம் தமது தனித்துவத்தைப் பேண விரும்பும் போது அதனால் ஏனைய இனங்களுககுப் பாதிப்பில்லையெனவும் அஸ்மின் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலையான சண்முகா இந்துக் கல்லூரிக்கு கல்வியமைச்சினால் நியமனம் பெற்றுச் சென்ற முஸ்லிம் ஆசிரியை அபாயா அணிந்து தனிது தனித்துவத்தைப் பேண வேண்டும் என கோரியதன் பின்னணியில் சர்சசை உருவாகியிருந்தது.

திருமலையில் முஸ்லிம்களுக்கென பிரத்யேக பாடசாலைகள் இருக்கும் நிலையில் முஸ்லிம்கள் அங்கு பணியாற்றவும் கல்வி கற்கவும் முஸ்லிம்களுக்கு முழு உரித்து இருப்பதனால் அதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அஸ்மின் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Unknown said...

Muddal Asmin pl study Islam

Post a Comment