முதலீட்டாளர்களை அச்சத்துக்குள்ளாக்கும் சூழ்ச்சி: எரான் - sonakar.com

Post Top Ad

Friday, 13 April 2018

முதலீட்டாளர்களை அச்சத்துக்குள்ளாக்கும் சூழ்ச்சி: எரான்நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் அதனை சீர்குலையச் செய்து முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளையே கூட்டு எதிர்க்கட்சி செய்து வருவதாக தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன.நாட்டின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் அச்சத்தை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை சீர்குலையச் செய்வதே பிரதான நோக்கம் எனவும் இதனால் பல்வேறு உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் கூட்டு எதிர்க்கட்சி வெளிநாடுகளுக்கு வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற தவணை மே மாதமே ஆரம்பிக்கவுள்ள நிலையில் பல்வேறு பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக எரான் மேலும் தெரிவிக்கின்றமையும் அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment