அசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Monday, 9 April 2018

அசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!வல்லரசுகளின் ஆயுதப் பரீட்சார்த்த களமாக மாறியுள்ள சிரியாவில் இன்று இடம்பெற்ற இரசாயன தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அசாத் எனும் மிருக்கத்தை ஆதரித்து வரும் ரஷ்யா மற்றும் ஈரான் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஆதரவு போராளிக் குழுக்கள் உதவியின்றி கைவிடப்பட்ட நிலையில் பல நிலைகளிலிருந்து பின் வாங்கியுள்ளதுடன் ரஷ்யாவின் தலையீடு களநிலவரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் நடாத்தப்பட்டு அதனடிப்படையில் குற்றஞ்சாட்டும் படலங்களும் தொடர்கிறது. எனினும், அப்பாவி பொதுமக்கள், குழந்தைகளின் உயிரிழப்புகளே தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment