சு.கவின் 'போக்கு' கவலையளிக்கிறது: ஹிருனிகா - sonakar.com

Post Top Ad

Monday, 2 April 2018

சு.கவின் 'போக்கு' கவலையளிக்கிறது: ஹிருனிகா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகள் கவலையளிப்பதாக தெரிவிக்கிறார் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர.

உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வாக்குறுதியளித்திருந்த போதிலும் சில இடங்களில் கட்சி உறுப்பினர்கள் பெரமுனவுக்கு வாக்களித்திருப்பதாகவும் இது தொடர்பில் விசாரித்த போது ஜனாதிபதி ஒன்றைச் சொல்ல, கட்சி செயலாளர் வேறொன்றையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் இன்னொன்றையும் சொல்வதனால் கட்சி உறுப்பினர்கள் குழம்பிப் போயுள்ளதாக தெரிவிக்கிறார்.


எனினும், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை தலைமைக்கு அனைவரும் கட்டுப்படுவதாகவும் சுதந்திரக் கட்சியின் இந்தப் போக்கு தமக்குக் கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment