சு.க உட்கட்சி முறுகல்; உரிய 'மரியாதை' கோரும் சந்திம! - sonakar.com

Post Top Ad

Sunday, 15 April 2018

சு.க உட்கட்சி முறுகல்; உரிய 'மரியாதை' கோரும் சந்திம!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்ததன் பின்னணியில் அரசை விட்டு விலகியுள்ளனர்.எனினும், சு.க - ஐ.தே.க இணைந்த கூட்டாட்சியைத் தொடர்வதற்கான இணக்கப்பாடு எட்டியுள்ள நிலையில் சுதந்திரக் கட்சி மட்டத்தில் இது குறித்து ஆராய பிரத்யேக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்த்து வாக்களித்த குரூப் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரப்போவதாகவும் தெரிவித்து வருகின்ற நிலையில் ஒரு சிலர் அதற்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆதலால் உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனவும் புறக்கணிக்கப்படக் கூடாது எனவும் சந்திம வீரக்கொடி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment