30 நாட்களுக்குள் 'அறிக்கை' வேண்டும்: அமெரிக்க கூட்டணி புதிய நிபந்தனை - sonakar.com

Post Top Ad

Sunday, 15 April 2018

30 நாட்களுக்குள் 'அறிக்கை' வேண்டும்: அமெரிக்க கூட்டணி புதிய நிபந்தனை


சிரியா மீது 'வெற்றிகரமான' வான் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கின்ற அமெரிக்கா - ஐக்கிய இராச்சியம் - பிரான்ஸ் கூட்டணி, இரசாயன தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை 30 நாட்களுக்குள் கையளிக்கப்பட வேண்டும் என புதிய நிபந்தனை விதித்துள்ளது.


விசாரணை நிறைவுறாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான தாக்குதல் சர்வதேச விதிகளை மீறிய செயல் எனக் கூறி ரஷ்யாவினால் கொண்டுவரப்பட்டிருந்த கண்டனப் பிரேரணைக்கு சீனா மற்றும் பொலிவியா மாத்திரமே ஆதரவளித்திருந்த நிலையில் எட்டு நாடுகள் எதிர்த்து வாக்களித்ததனால் பிரேரணை தோல்வி கண்டது.

இந்நிலையில், விசாரணையை நடாத்தி முடிக்க காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளமையும் தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர் விசாரணையொன்று அவசியமா எனவும் கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment