அல்ஜீரியா: விமான விபத்தில் 257 பேர் பலி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 April 2018

அல்ஜீரியா: விமான விபத்தில் 257 பேர் பலி!


அல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் ஆகக்குறைந்தது 257 பேர் பலியாகியுள்ளதாக இது வரை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெரும்பாலானோர் இராணுவத்தினரும் அவர்களது குடும்பத்தினருமே என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள அதேவேளை விமானப் பணியாளர்கள் 10 பேர் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டு மலேசிய விமானம் MH17 விபத்துக்குள்ளானதில் 298 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவே பாரிய அனர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment