எதிர்க்கட்சி வரிசையில் ஆசனம் கேட்டு குரூப் 16 கடிதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 27 April 2018

எதிர்க்கட்சி வரிசையில் ஆசனம் கேட்டு குரூப் 16 கடிதம்!


நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த குரூப் 16 உறுப்பினர்கள் தமக்கு எதிர்க்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்குமாறு நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.எனினும், மறு புறத்தில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வரும் குறித்த குழுவினர் மே தின கொண்டாட்டங்களில் கட்சியுடன் இணைந்திருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மே 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பித்ததும் கூட்டு எதிர்க்கட்சியில் குறித்த 16 பேரும் இணைந்து கொள்வார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment