குரூப் 16ன் வெற்றிடத்துக்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 12 April 2018

குரூப் 16ன் வெற்றிடத்துக்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அரசை விட்டு விலகிக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில் அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளுக்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சித்துறையை சரத் அமுனுகமவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ரஞ்சித் சியம்பலபிட்டியவும் விளையாட்டுத்துறை அமைச்சராக பைசர் முஸ்தபாவும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மலிக் சமரவிக்ரமவும் கூடுதல் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

இதேவேளை ஆறு கபினட் அந்தஸ்த்து அமைச்சுப் பதவிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கே வழங்கப்படும் என முன்னர் இணக்கம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment