இனி வரும் தேர்தல்களில் UNPக்கு வெற்றிதான்: ஜோன் - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

இனி வரும் தேர்தல்களில் UNPக்கு வெற்றிதான்: ஜோன்


இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி அபார வெற்றியைப் பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜோன் அமரதுங்க.

கடந்த தேர்தலில் கூட முறையாகப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித பின்னடைவும் இல்லையென தெரிவிக்கும் அவர், மக்கள் மனம் போன போக்கில் வாக்களித்து விட்டார்கள் எனவும் இனி வரும் காலங்களில் கட்சியைக் காப்பாற்றும் வகையில் சிந்தித்து வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.2015ல பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலையில் படுதோல்வியைச் சந்தித்த நிலையில் கட்சித் தலைமை நீங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத்துக்குள் குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment