ரவி சொல்வதிலும் 'ஏதோ' இருக்கிறது: தூபமிடும் பியல் நிசந்த! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 March 2018

ரவி சொல்வதிலும் 'ஏதோ' இருக்கிறது: தூபமிடும் பியல் நிசந்த!கண்டி கலவரத்தின் பின்னால், இவ்வரசின் முக்கிய புள்ளிகள் இருப்பதாக கூறியிருப்பதானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நாமத்தை வைத்து, முஸ்லிம்களிடத்தில் அரசியல் பிழைப்பு நடாத்திக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளதோடு, முஸ்லிம்கள் உண்மைகளின் பக்கம் செல்ல காரணமாக அமைந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த  தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:அண்மையில் கண்டியில் பாரிய கலவரம் ஒன்று இடம்பெற்று முற்றுப் பெற்றுள்ளது. வழமை போன்று, இதன் பின்னாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளார் என்ற கதைகள் எழாமல் இல்லை. இந்த பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பேச்சு அமைந்துள்ளது.இக் கலவரத்தின் பின்னால் அரசின் முக்கிய அரசியல் வாதிகள் உள்ளதான தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். 

இது, அவர் அரசுக்கு வெளியில் இருந்து கூறவில்லை. அரசுக்குள் இருந்து கொண்டே இவ்வாறு கூறியுள்ளார். இவர், இன்று ஆட்சி நடாத்திக்கொண்டிருக்கும் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவர்.இதன் பின்னரும், இதன் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே உள்ளார் என யாராவது கூறுவதாக இருந்தால், அவரை புத்தி சுயாதீனமற்றவராகவே கூற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய இடத்தில் உள்ள ஒருவர். அவர் இவ்வாறு கூறியிருப்பதானது, ஜனாதிபதி மைத்திரியை குறி வைத்த ஒரு பேச்சாகவே கருத வேண்டியுள்ளதும் என அவர் குறிப்பிட்டார்.

-JO

No comments:

Post a Comment