ரோசியின் பதவிக்கு ஆபத்து காத்திருக்கிறது: மனோ - sonakar.com

Post Top Ad

Saturday, 31 March 2018

ரோசியின் பதவிக்கு ஆபத்து காத்திருக்கிறது: மனோ


கொழும்பு மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பொடு போக்காக நடந்து வரும் நிலையில் மேயர் ரோசியின் பதவிக்கு ஆபத்து காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஒரு மேலதிக ஆசனம் மூலம் பெரும்பான்மையை நிரூபித்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தமது தரப்போடு எதுவித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கும் அவர், வரவு-செலவுத் திட்டத்தின் போது ஒரு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரோசியை ஆதரிக்கவில்லையென்றாலும் அவரது பதவிக்கு ஆபத்து வரும் என தெரிவித்துள்ளார்.புதிய தேர்தல் முறைமையினால் கூடுதலான உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள நிலையில் அதற்கும் புதிய கட்டிடம் தேவைப்படுவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment