வன்முறையால் சுற்றுலாத்துறைக்கு பேரிழப்பு என்கிறார் ஜோன்! - sonakar.com

Post Top Ad

Tuesday 20 March 2018

வன்முறையால் சுற்றுலாத்துறைக்கு பேரிழப்பு என்கிறார் ஜோன்!



கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளால் சுற்றுலாத்துறைக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஹோட்டல்கள், விமான சேவைகள் உட்பட சுற்றுலாத்துறையில் தங்கியிருக்கும் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க.

ஹோட்டல் உரிமையாளர்கள், ஸ்ரீலங்கன் மற்றும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவன முகாமையாளர்களும் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் வெளிநாடுகளில் பெரும் பணச் செலவில் இலங்கை சுற்றுலாத்துறையை முன்னேற்ற முதலீடு செய்திருந்ததாகவும் அவையனைத்தும் வீணாகிப் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.


எனினும், வன்முறைச் சம்பவங்களை அரசாங்கமே கட்டுப்படுத்தத் தவறியதுடன் பல இடங்களில் பாதுகாப்புப் படையினரின் உதவியுடனேயே வன்முறைகள் அரங்கேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே மார்ச் - ஏப்ரல் பருவ கால சுற்றுலாத்துறை 10 வீத வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளமையும் ஏலவே லக்சல நிறுவனம் 100 வீத வீழ்ச்சியைக் கண்டிருப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் குரல் வானொலியில் வைத்து தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-அஷ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment