பெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான் - sonakar.com

Post Top Ad

Monday 19 March 2018

பெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்


சவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான்.

கடந்த நான்கு தசாப்தங்களாக தீவிரப் போக்கில் தமது நாடு சென்று விட்டதாகவும் இனி வரும் காலங்களில் மிதவாத கொள்கையைப் பின்பற்றவுள்ளதாகவும் கடந்த வருடம் அவர் தெரிவித்திருந்த நிலையில், சவுதியில் பெண்களுக்கும் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் உட்பட விளையாட்டு போட்டிகளை பார்வையிடல் மற்றும் பல்வேறு விடயங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.



இந்நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள முஹம்மத் பின் சல்மான், யாரும் இவ்வாறான திணிப்பைக் கையாள வேண்டிய அவசியமில்லையெனவும் கண்ணியமான ஆடைகளை அணிவது போதுமானது எனவும் விளக்கமளித்துள்ளார்.

ஞாயிறன்று அமெரிக்காவின் சி.பி.எஸ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், கண்ணியமான ஆடைகளை அணியும்படியே ஷரியா சட்டம் வலியுறுத்துவதாகவும் அது கருப்பு நிற அபாயாவாக இருக்க  வேண்டும் என எங்கும் கூறப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saudi prince says Abaya not necessary

No comments:

Post a Comment