வன்முறையாளர்களை விரட்ட நான்கு மணி நேரம் துப்பாக்கி வேட்டு; மா.சபையில் தகவல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 March 2018

வன்முறையாளர்களை விரட்ட நான்கு மணி நேரம் துப்பாக்கி வேட்டு; மா.சபையில் தகவல்!மெனிக்ஹின்ன பகுதியில் பொலிசாரினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருந்திரளான கடும்போக்குவாதிகள் கூடியிருந்த நிலையில் இராணுவத்தினர் அழைக்கப்பட்டு சுமார் நான்கு மணி நேரம் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் சட்டத்தரணி சுனில் அமரதுங்க.

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு பல்லேகலை மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவிததார். 

சம்பவத்தின் போது தான் வீட்டிலேயே இருந்ததாகவும் 15 முதல் 25 வயது வரையான வாலிபர்களே இவ்வாறு வன்முறையில் குதித்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, குண்டசாலை பிரதான பாதையால் செல்லும் போது நத்தரம்பொத பிரதேசத்தில் பாரிய எழுத்துருவில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையுடன் மகசோன் பலகாய அலுவலகம் அங்கு இயங்கி வருவதாகவும் பொலிசாரும் புலனாய்வுப் பிரிவினரும் இதையெல்லாம் பார்த்தும் விழிப்படையாமல் இருந்ததே வன்முறை வளர்வதற்குக் காரணம் எனவும் சாந்தினி கோன்கஹகே தெரிவித்ததுடன் அவ்வாறு விழிப்புடன் இருந்திருந்தால் பாரிய அழிவுகளைத் தடுத்திருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

-ஜே.எம்.ஹபீஸ்No comments:

Post a Comment