ரணிலை எதிர்ப்பவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்: காமினி - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

ரணிலை எதிர்ப்பவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்: காமினி


ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்துக் கொண்டு அரசில் பதவி வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம.

கூட்டாட்சியில் நிலவும் தொங்கு சூழ்நிலையில் அமைச்சரவையில் மேற்கொள்ளும் முடிவுகளைக் கூட முறையாக அமுல்படுத்த முடியாத சூழ்நிலையே நிலவுவதாக தெரிவிக்கும் அவர், இதற்கிடையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கூட்டரசை நிலை குலையச் செய்ய உள்ளிருந்தே முயல்பவர்கள் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 4ம் திகதி இது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ள அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியினர் பணப் பார்சல் கொடுத்து ஆள் பிடிப்பதாக விமல் வீரவன்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment