மூதூர்: கடலரிப்பினால் போக்குவரத்து பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2015

மூதூர்: கடலரிப்பினால் போக்குவரத்து பாதிப்புமூதூர் பிரதேசத்திலுள்ள ஹபீப் நகர், தக்வா நகர் ஆகிய  கிராமங்களை இணைத்துச்செல்லும் கரையோர வீதியானது கடல் சீற்றத்தினால் பாதிப்படைந்துள்ளது.
மோசமான கடலரிப்புக்கு உள்ளாகிவந்த  ஹபீப் நகர், தக்வா நகர் கிராமத்தை அண்டிய  கடல்  பரப்பில் கல்வேலி அமைக்கும் பணியின் ஒரு கட்டம் நிறைடைந்துள்ள நிலையிலேயே இவ்வீதியானது கடல் சீற்றத்தினால் பாதிப்படைந்துள்ளது.

கடல் சீற்றத்தினால் பாதிப்பிற்கு உள்ளான குறித்த பகுதியில் கடலரிப்பு கூடுதலாக இடம்பெற்று வந்ததனால் கடலரிப்பை தடுக்கும் வகையில் கல்வேலி அமைப்பதில்  அப்பகுதியை முன்னுரிமைப்படுத்துமாறு குறித்த பகுதி மக்களும் சமூக அமைப்புக்களும் சுட்டிக்காட்டிய போதும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் அதனை கவனத்தில் எடுக்கவில்லையென கவலை தெரிவிக்கப்படுகின்றது.


வீதி பாதிப்படைந்ததைத் தொடர்ந்து இதனூடாக இடம்பெற்றுவந்த வாகனப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வீதியைப் பயன்டுத்திவந்த ஆயிரக் கணக்கான  மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

-மூதூர் முறாசில்

No comments:

Post a Comment