DONATIONS

அஸ்ஸலாமு அலைக்கும்!

சோனகர்.கொம் ஊடக செயற்பாடுகளுக்குத் தம்மாலான பங்களிப்பை வழங்க விரும்புவதாக வாசகர்களால் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சமூக ஒருங்கிணைப்பின் உச்ச அவசியம் நிறைந்திருந்த கால கட்டத்தில் எமது பணிகளை ஆரம்பித்த நாம் வெளியார் உதவிகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கவில்லை.

எனினும்,அவர்கள் அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூறி முதற்கண் எமது ஜஸாகல்லாஹ், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது எமது செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி சமூக ஊடகத் தேவையின் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். வரலாறு ஆவணப்படுத்தல், முஸ்லிம் குரல் வானொலி (www.muslimkural.com) மற்றும் இங்கு எமது தளத்தில் தமிழ் செய்திச் சேவையைத் தொடர்ந்து ஊடகவியலாளர் இர்பான் இக்பாலின் வழி காட்டலில், காலத்தின் தேவை கருதி எமது சர்வதேச பிரசன்னத்தை மேலும் விரிவாக்கும் பொருட்டு,  அடுத்த கட்டமாக ஆங்கில செய்திச் சேவை (www.newsbug.lk) டிசம்பர் 2015 முதல் ஆரம்பிக்கப்பட்டு  தற்போது பரீட்சார்த்தமாக இயங்கி வருகிறது.

நீண்ட தூரத்துக்கான ஆரம்பம் என்பதோடு எமது செயற்பாடுகளை நிறுவனப் படுத்தும் அடிப்படையில் இவ்வருடம் முதல் இயங்க ஆரம்பித்துள்ளோம். இந்நிலையில் நீங்களும் இதில் பங்களிக்க விரும்பினால், இன்ஷா அல்லாஹ்,  கீழ்க்காணும் Donate இணைப்பு மூலமாக நீங்கள் விரும்பும் தொகையை இணைத்துக்கொள்ளலாம்.

இது உங்கள் சுய விருப்பத்துக்கமைவானதும் உங்களால் முடிந்ததுமாகும். மேலும், இதுவரை காலமும் தனி நபர் நிதியிலேயே இயங்கி வரும் நாம் நீண்ட கால செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு, சிறு பங்களிப்பினை இணைத்துக்கொள்ளும் பொருட்டு தற்போது சிறிய அளவிலான Contextual விளம்பரங்களைப் பிரசுரிக்க ஆரம்பித்துள்ளோம். எனவே எமது அனுசரணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் தளங்களுக்கு விஜயம் செய்தும் கூட உங்கள் பங்களிப்பை எமக்காக இணைத்துக்கொள்ளலாம்.

Contextual விளம்பரங்கள் உங்கள் பிரவுசர் (Browser) செயற்பாட்டைக் கொண்டதாகும். அதில் சேமிக்கப்படும் குகீஸ் மற்றும் நீங்கள் இணையத்தில் உலாவரும் ஏனைய தளங்கள், தேடல்கள் போன்ற உங்கள் சொந்த செயற்பாட்டின் அடிப்படையிலான விபரங்களைக் கொண்டு அதற்கேற்ப விபரங்கள் உள்ள விளம்பர இணைப்புகள் காண்பிக்கப்படும்.

அது போல அவற்றைப் பார்ப்பதை நீங்கள் விரும்பவில்லையென்றால் அங்கு காணப்படும் Adchoice வசதி மூலமாக தவிர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் எண்ணத்துக்கும் ஆர்வத்துக்கும் நன்றிகள். உங்கள் துஆக்களில் எம்மையும் இணைத்துக்கொள்ளுங்கள்! விரும்புபவர்கள் கீழ்க்காணும் Donate பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தலாம்.

மேலதிகமாக எமது தளத்தில் விளம்பரம் செய்யவோ அல்லது அல்-இல்ம் போன்ற எமது சமூக நலத் திட்டங்களில் பங்களிக்கவோ விரும்பினால் நேரடியாக [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.

ஜஸாகல்லாஹ்.

-சோனகர் வலைத்தளம்.

Updated: 19th January 2016