இலக்கியம்

கடந்த கால இலங்கைச் சோனகர்களின் வரலாற்றின் மிகப்பெரும் குறைபாடாக இருப்பது நமது “இலக்கியம்”. தமிழ் மொழியிலான நமது இலக்கிய நாட்டத்தின் பெரும் பகுதி பெருவாரியாக மொழியோடு மாத்திரம் கலந்திருந்ததனால், நமது சமூகம் சார்ந்த, வாழ்க்கை முறைகள், நம் வரலாறு சார்ந்த இலக்கியங்கள் மிகச் சிலராலேயே பதிவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த எல்லைக் கோட்டைத்தாண்டிய செயற்பாடுகள் மூலம் அவ்வப்போது தம் சமூக நோக்கங்களுடன் இலக்கியப்பதிவுகளை உருவாக்கிய முன்னோரும், இப்போது தற்காலத்தில் வாழ்வோரும் மிகச்சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். தமது மொழி சார்ந்த, உலக விடயங்கள், மனித இயல்புகள், கற்பனைகள் சார்ந்த படைப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கினை நமது சமூகம் சார்ந்த, வரலாறு சார்ந்த, வாழ்க்கை முறை சார்ந்த விடயங்களுக்காகவும் ஒதுக்கவில்லையா? அல்லது அதற்கான களம் நம்மிடத்தில் காணப்படவில்லையா? எனும் கேள்விக்கு பதில் தேடுவதை விட இனி வரும் காலத்தில் அவ்வாறு ஒரு களத்தினை நாம் உருவாக்கிக் கொள்வது சாலச்சிறந்தது.

அந்த வகையில் இணைய உலகின் பெரு வெள்ளத்தில் சிறு துளியாகவேனும் நம் சமூகம் சார்ந்த இலக்கியத்திற்கும், நம் படைப்பாளிகளுக்கும் பொதுக்களமொன்றின் செயற்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதிலும் நமது வலைத்தளம் முன் நிற்க வேண்டிய காலக்கட்டாயம் இருக்கிறது.

இதன் வழியில், நமக்கு முன் இருந்த படைப்பாளிகளினதும், இன்றும் இலங்கையிலும் உலகின் பல் வேறு பாகங்களிலும் இலக்கிய நாட்டத்தில் கவிதைகள்,கதைகள் மற்றும் இன்னபிற வழிகளில் தம் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நம் சமூகத்தாரை, நம் சமூகம் சார்ந்த இலக்கியங்களைப் பதிவிலிடுவதையும் இந்த வலைத்தளத்தின் முக்கிய செயற்பாடாகக் கருதி உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

தமிழ் – சிங்கள – ஆங்கில மொழிகளில் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]ஜிமெயில்.com

– ஆசிரியர் குழு.