இனவாத ‘வெறுப்பூட்டல்’ ஓயவில்லை : ஒப்புக்கொண்ட ரவி! (video)

வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லையென ஒப்புக் கொண்டுள்ளார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.

பிரபல பேங்கர்ஸ் (Bankers) சஞ்சிகையின் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதியமைச்சர் விருதினைப் பெறுவதற்காக தற்போது லண்டன் சென்றிருக்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் இர்பான் இக்பாலுடனான நேர்காணலில் இணைந்திருந்தார்.

இதன் போது, இலங்கையில் அனைத்தின மக்களும் அமைதியான சூழ்நிலை உருவாகும் எனும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் அதற்கான போதிய நடவடிக்கை எடுத்து விட்டதா என ஊடகவியலாளர் இர்பான் இக்பாலினால் வினவப்பட்ட போதே ‘போதிய நடவடிக்கை’ எடுக்கப்படவில்லையென தெரிவித்த நிதியமைச்சர், விரைவில் வெறுப்பூட்டும் பேச்சை இல்லாதொழிக்கும் வகையிலான உறுதியான தீர்மானம் உருவாகும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவு உட்பட குறித்த விருதினால் நாட்டு மக்கள் அடையப் போகும் நன்மையென்ன எனவும் இங்கு வினவப்பட்டது. இவற்றிற்கு நிதியமைச்சர் வழங்கிய பதில்களடங்கிய காணொளி: