பசிலின் மல்வானை காணி ஏலத்துக்கு தடை

சர்ச்சைக்குள்ளான பசில் ராஜபக்சவின் மல்வானை காணி ஏல விற்பனைக்குத் தடை விதித்துள்ளது பூகொட நீதிமன்றம்.

சொகுசு வீடொன்றுடனான குறிதத காணியின் பெறுமதி 208 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை பொது சேவைக்குப பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்து பொது ஏல விற்பனையை நிறுத்த விடுத்த வேண்டுகோளை ஏற்றெ இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இம்மாதம் 29ம் திகதி ஏலமிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.