கிண்ணியா: டெங்கு ஒழிப்புப் பணியில் பொலிஸ் அதிகாரிகள்

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் இன்று (20) டெங்கு தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு உட்பட பொலிஸ் அதிகாரிகளின் களவிஜயம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு விஜயசிரி தலைமையில் இடம் பெற்றது.இதில் திருகோணமலை மட்டக்களப்பைச் சேர்ந்த 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் பங்கேற்றனர்.

இதன் போது கிண்ணியா பாடசாலைகளில் மாணவ மாணவிகளுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வுகள் உட்பட கிண்ணியா பகுதிகளில் டெங்கு தீவிரமடைவதைத் தடுக்க மக்களுக்கான எச்சரிக்கையும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

-ஹஸ்பர் ஏ ஹலீம்