திருமலை: ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை, அபேயபுர சிங்கள ஆரம்பப் பிரிவு பாடசாலையில் காணப்படும்; ஆசிரியர்களுக்கான  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அபேயபுர சுற்றுவட்டத்தில் பெற்றோர் இன்று (20) காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 308 மாணவர்கள் கல்வி கற்றுவரும் இப்பாடசாலைக்கு 8 ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 4 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளனர். எனவே, 4 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் கண்டி -திருகோணமலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அரச அதிகாரிகள் அலுவலகத்துக்குச் செல்வதில் நேரம் வீண்விரயமாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

-ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா: டெங்கு ஒழிப்புப் பணியில் பொலிஸ் அதிகாரிகள்
நாச்சியாதீவு முஸ்லிம் பகுதிக்குள் புகுந்து பிக்குகள் அட்டகாசம்; பொலிஸ் தலையீடு!