விமல் வீரவன்சவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

அரச வாகன துஷ்பிரயோக வழக்கில் கைதான தேசிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 3ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் கைதான அவரது சகோதரர் மற்றும் கட்சிப் பேச்சாளர் முசம்மில் ஆகியோருக்கு அவர்களது குழந்தைகளின் நலன் அடிப்படையிலான விசேட காரணத்தின் பின்னணியில் பிணை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது சிறையில் எழுத்தாளர் மற்றும் ஓவியர் அவதாரம் எடுத்துள்ள விமல் வீரவன்சவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளமையும் ஜனவரி 10ம் திகதி கைது செய்யப்பட்ட விமல் ஏப்ரல் 3ம் திகதியுடன் 85 நாள் சிறை வாழ்க்கையை பூர்த்தி செய்யவுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.