வழிப்பறி கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

ஆயுர்வேத பெண் வைத்தியர் ஒருவரின் கழுத்திலிருந்த மாலையைக் கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இருவர் மீது சிலாபம் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

ஆரச்சிகட்டுவ பகுதியில் துப்பாக்சிச் சூட்டுக் காயத்துடன் தப்பிச் சென்ற இருவரும் முந்தலம் பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது வாகனத்தை மோதி காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் விரட்டிச் சென்ற பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.