தம்மாலோக தேரரைக் கைது செய்ய உத்தரவு

விகாரையிலிருந்து அதிக சப்தத்துடன் அதிகாலையில் ஒலிபரப்புகளை மேற்கொண்டு ஒலி மாசடையக் காரணமாக இருப்பதாக உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு அவர் இன்று சமூகமளிக்காத நிலையில் தேரருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேறு ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற அனுமதயுடனேயே அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறித்த வழக்கில் காலை 5 – 6 மணிக்கிடையில் விகாரையிலிருந்து மேற்கொள்ளப்படும் ஒலிபரப்பு நிறுத்தப்பட வேண்டும் என கடந்த தடவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.