ஆவா குழு பிரதானி கொழும்பில் கைது: பொலிஸ்!

யாழ்ப்பாண பிரதேசத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் பிரதானி உட்பட  மூவர் தெஹிவளை மற்றும் கொட்டஹேன பகுதிகளில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

யாழில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட குறித்த குழுவினரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே உருவாக்கியதாக முன்னர் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும் கோத்தபாய அதனை மறுத்திருந்த நிலையில் குறித்த குழுவின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.