டெங்கு ஒழிப்பு: 1500 பேருக்கு வேலைவாய்ப்பு

நாட்டில் டெங்கு விளைவுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் புதிதாக 1500 பேர் டெங்கு ஒழிப்பு சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நுளம்பு ஒழிப்பில் பயிற்சி பெற்ற 500 பேர் ஏற்கனவே வேலைக்கமர்த்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் புதிய நியமனங்களுக்கான கடிதங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் டெங்கு பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தும் அடிப்படையில் இப்புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.