கண்டி: காணாமற்போன மாணவன் சடலமாக மீட்பு

கண்டி, ஹல்ஒலுவ பகுதியில் மஹாவலி ஆற்றில் நீராடச்சென்றிருந்த நிலையில் நேற்று முன் தினம் காணாமற் போயிருந்த மாணவன் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கடந்த 17 ம் திகதி கண்டி தர்மராஜ கல்லூரிக்கும் கிங்ஸ்வுட் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின் போது நீராடச் சென்றிருந்த நீராடச்சென்றிருந்த ஐந்து மாணவர்களுள் ஒருவரான தர்மராஜ கல்லூரியில் 11ம் ஆண்டில் கல்வி கற்ற திலந்த முதலிகே எனும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட் ஆஸிக்