இந்தோனேசிய பள்ளிவாசலுக்கு சவுதி மன்னர் கொடுத்த ‘பரிசு’

ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர், இந்தோனேசியாவின் இஸ்திக்லால் பள்ளிவாசலுக்கு கஃபாவைச் சுற்றியிருக்கும் கிஸ்வா போன்ற தங்க முலாம் பூசிய நூலிழைகளால் ஆன அல்-குர்ஆன் ஆயத்து அடங்கிய நினைவுப் பரிசொன்றை வழங்கியுள்ளார்.

பெரும் ஆட்படையணி, பொருட் செலவில் அமைந்துள்ள சவுதி மன்னரின் குறித்த விஜயம் முஸ்லிம் உலகின் கவனத்தை பெற்றுள்ள நிலையில் தெற்காசியாவின் மிகப் பெரிய பள்ளிவாசல்களுள் ஒன்றான குறித்த பள்ளிவாசலுக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த மன்னர் சல்மான் அங்கு சமய முக்கியஸ்தர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதோடு அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்து கொண்டுள்ளமையும் சவுதி மன்னரை வரவேற்க விமானத்திலிருந்து இறங்கும் படிகளும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தமையம் குறிப்பிடத்தக்கது.