களனி பகுதியில் ஆயுத முனையில் திருட்டு: பொலிஸ் எச்சரிக்கை

தலைக்கவசம் அணிந்து ஆயுதமுனையில் திருடும் இருவரின் நடவடிக்கைகள் களனி பொலிஸ் பிரிவில் அதிகரித்துள்ளது தொடர்பில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி எச்சரித்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.

பொது மக்களின் கைப் பை மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குள்ளும் புகுந்து கொள்ளைகளை நடாத்தியுள்ள குறித்த குழுவைத் தேடும் நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை அனைவரையும் விழிப்புடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.