அரசாங்கத்துடன் ‘டீல்’ எதுவுமில்லை: விமல் தரப்பு!

போலி கடவுச்சீட்டு விவகாரத்திலும் விரைவில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்த்தரப்பில் இருந்து பெருமளவு குரல் எழுப்பினாலும் கூட சட்டவிரோத விவகாரங்களில் விமல் வீரவன்ச கைது செய்யப்படாமைக்கு அரசுடன் அவர் வைத்திருக்கும் ‘இரகசிய’ டீலே காரணம் என தெரிவிக்கப்பட்டு வந்தமை பொய்யாகி விட்டதாக தெரிவித்துள்ளது விமல் வீரவன்ச தரப்பு.

அப்படியொரு டீல் இருந்திருந்தால் விமல் வீரவன்ச நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லையென அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை விமல் வீரவன்ச ஒரு போதும் அரசுடன் டீல் வைத்திருக்கவில்லையென தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது கடவுச்சீட்டு காணாமல் போய்விட்டதாகக் கூறி வேறு கடவுச்சீட்டைப் பெற்றிருந்த விமல், பழைய கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்ட போதிலும் பிரதமர் ரணியில் தலையீட்டில் கடவுச்சீட்டு திரும்பவும் வழங்கப்பட்டதோடு அவர் வெளிநாடு செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.