அமெரிக்க தூதர் – முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கையில் தற்காலத்தில் நிலவி வரும் சூழ்நிலை மற்றும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பில் விளக்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று சந்தித்துள்ளது.

முஸ்லிம் கவுன்சில் தவைர் என்.எம். அமீன், உப-தலைவர் ஹில்மி அஹமட் உட்பட்டோர் கலந்து கொண்ட இச்சந்திப்பின் பின்னணியில் இது தொடர்பில் தாம் கவனமெடுப்பதாகவும் வெள்ளியன்று ட்விட்டர் மூலம் தனது கருத்தை வெளியிடவுள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.