GSP+ ஐரோப்பிய யூனியன் பச்சைக் கொடி!

GSP+ சலுகை விரைவில் கிடைக்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் அதற்காக இணக்கப்பாட்டை முன்மொழிந்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் எதிர்பார்த்த முக்கிய 27 அம்சங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் காட்டியிருக்கும் முன்னேற்றத்தின் அடிப்படையில் இச்சலுகையை மீண்டும் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்க வேண்டுமாயின் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும்இ ஐரோப்பிய நாடாளுமன்றமும் அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.