சீன முதலீட்டை எதிர்க்கவில்லை: மஹிந்த

தமது ஆட்சிக்காலத்தில் சீன முதலீட்டை உள்வாங்கியிருந்த போதிலும் தேசிய அரசில் சீன முதலீடு மற்றும் திட்டங்கள் கூட்டு எதிர்க்கட்சியினரால் எதிர்க்கப்பட்டு வரும் நிலையில் சீன முதலீட்டைத் தாம் எதிர்க்கவில்லையெனவும் மக்கள் நலனுக்கு எதிராக செல்லாதவரை அவற்றை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

இன்றைய தினம் ட்விட்டர் ஊடாக கேள்வி பதிலில் ஈடுபட்ட போதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ள போதிலும் பொதுக் கூட்டங்களில் சீன முதலீட்டுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தமை தொடர்பில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.