40 வாகனங்கள் துஷ்பிரயோகம்; ராவணா பலய செயலாளரும் கைதாவாரா?

மஹிந்த அரசில் விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் 40 அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டில் கைதான விமல்வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச மற்றும் அவரது பேச்சாளர் முசம்மில் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசேட காரணங்களின் அடிப்படையிலேயே பிணை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த அமைச்சின் கணிசமான தொகை வாகனங்கள் கடும்போக்கு அமைப்பான இராவணா பலய செயலாளர் இத்தேகந்த சதாதிஸ்ஸவினால் பயன்படுத்தப்பட்டிருந்ததாக அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் விசாரணைக்குட்படுபத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மூவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொகை வாகனங்களை சட்டவிரோதமாக பாவித்திருந்த குறித்த தேரர் தொடர்பிலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.