சமல் ராஜபக்சவின் கருத்து: ஐ.தே.க வரவேற்பு

ஹம்பாந்தோட்டை தொழிற்சாலை வலயம் நல்லதொரு திட்டம் என தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்ச, இதன் அடிப்படையைக் கொண்டு அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் விகாரை நிலங்களைக் கையகப்படுத்தாத வகையில் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

இதனை வரவேற்றுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டங்கள் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் கடந்த அரசைப் பொன்று ஒளித்து வைக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளதோடு கொழும்பில் கடந்த ஆட்சியில் நிலங்கள் கையகப்படுத்திய போது தற்போது எதிர்க்கட்சியில் வாய் திறக்க வில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.