கா’குடி: புதிய காதி நீதிபதியாக உமர்லெப்பை நியமனம்

காத்தான்குடி காதி நீதி மன்றத்தின் எட்டாவது புதிய காதி நீதிபதியாக ஓய்வு பெற்ற முன்னால் கிராம சேவகர் பிரபல சமூக சேவையாளர் முஹம்மது சரீப் உமர்லெப்பை நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி மீராமுகைதீன் முஹம்மது சரீப் மதீனா உம்மா ஆகியோரின் அன்பு மகனாக 1952ம் ஆண்டு பிறந்த முஹம்மது சரீப் உமர்லெப்பை தனது ஆரம்ப கல்வியை காத்தான்குடி மட்ஃமெத்தைப் பள்ளி வித்தியாலயத்திலும் தனது உயர் கல்வியை காத்தான்குடி மட்ஃமத்திய மஹா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலையில்) கற்றுள்ளார்.

1978ம் ஆண்டு விவசாய உத்தியோகஸ்தராக நியமனம் பெற்று இவர் 13 வருடங்கள் விவசாய உத்தியோகஸ்தராக கடமையாற்றிய பிற்பாடு 1991ம் ஆண்டு கிராம சேவக உத்தியோகஸ்தராக பதவி மாற்றம் பெற்று சேவையாற்றிய இவர் 2012 ம் ஆண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். கடந்த சுனாமியின் போது கிராம சேவகராக இருந்து சிறப்பாக செயலாற்றியவர் என்ற அடிப்படையில் அரசின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டு சிங்கப்பூர் சென்றமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த சமூக சேவையாளரான முஹம்மது சரீப் உமர்லெப்பை பல்வேறு பொது அமைப்புக்களின் பொறுப்புகளிலிருந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலின் முன்னால் தலைவராகவும், வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராகவும், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனியின் மட்டு மாவட்ட சம்மேளன தலைவராகவும்,வடகிழக்கு கிராம உத்தியயோகஸ்தர் சங்கத்தின் நீண்டகால பொருலாளராகவும் இருந்து பணியாற்றியமை விசேட அம்சமாகும்.

இறையில்லமான பள்ளிவாயலுக்கு இவர் தனது சொந்த காணியை வக்பு செய்ததன் மூலமாக இவரது பெயரினில் ‘உமர்சரீப்’ என்ற இறையில்லமொன்று காத்தான்குடியில் அமையப் பெற்றுள்ளது என்பதும் மறைவான விடயாகும்.

-Deen fairoos