புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக DIG பிரியந்த ஜயகொடி

ஸ்ரீலங்கா பொலிசின் புதிய ஊடக பேச்சாளராக டி.ஐ.ஜி பிரியந்த ஜயகொடி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவி வெற்றிடமாக இருந்த காரணத்தினால் பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டியுள்ள சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பி. விஜேவீர இனி வரும் காலங்களில் ஊடகங்களோடான உறவு தொடர்பில் அமைச்சின் நேரடி தலையீடு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.