ஆசியா பசுபிக்கில் சிறந்த நிதியமைச்சர்: ரவி கருணாநாயக்கவுக்கு கௌரவம்

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதியமைச்சர் கௌரவத்தை இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கியுள்ளது Tha Bankers Magazine எனும் சஞ்சிகை.

லண்டனில் வெளியிடப்படும் குறித்த சஞ்சிகை, 2016ம் ஆண்டுக்கன சிறந்த நிதியமைச்சராக ரவி கருணாநாயக்கவைத் தெரிவு செய்துள்ளதோடு புதிய அரசின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளையும் விட சிறந்த பொருளாதார வளர்ச்சியையும் வருவாயையும் இலங்கை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.