யாழ். பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சம்பிரதாய மரபு ஒழுங்குகளிற்கு அமைவாக சிறப்பாக  செவ்வாய்க்கிழமை  இன்று (10)  நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறுவதுடன் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்குரிய பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இன்றும்  (10)  நாளையும் (11) நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 1939 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

மேலும் இந்த பட்டமளிப்பு நிகழ்வுகளானது இரண்டு தினங்களாக ஒன்பது அமர்வுகளாக நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விரிவுரையாளர்கள் பட்டதாரிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் விசேட கலாசார அணிவகுப்புடன் அரங்கிற்கு அழைத்துவரப்பட்டு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

-பாறுக் ஷிஹான்

ஆசியா பசுபிக்கில் சிறந்த நிதியமைச்சர்: ரவி கருணாநாயக்கவுக்கு கௌரவம்
விமல் வீரவன்ச கைது!