விமல் வீரவன்ச கைது!

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்த விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வாகன துஷ்பிரயோக விவகாரம் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் பல தடவைகள் விசாரணையைப் புறக்கணித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டாவது தடவையாக இன்று விசாரணைக்கு சமூகமளித்திருந்தார்.

இதே குற்றச்சாட்டில் அவரது சகோதரர் மற்றும் பேச்சாளர் முசம்மில் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசேட காரணங்களுக்காக பிணை வழங்கப்பட்டிருந்தமையும் இராவணா பலய செயலாளரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.