கொலை வழக்கு: ஆறு பொலிசாருக்கு மரண தண்டனை!

File photo

கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட ஆறு பொலிசாருக்கு மரண தண்டனை விதித்துள்ளது பதுளை உயர் நீதிமன்றம்.

2014ம் ஆண்டு மே மாதம் புதையல் தோண்டிய இளைஞன் ஒருவன் பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்திருந்த நிலையில் குறித்த கொலைக்குக் காரணமாகவிருந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊழியர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.