தேர்தல் தாமதமாவதற்கு நான் காரணமில்லை: பைசர்

உள்ளூராட்சித் தேர்தல் தாமதமாவதற்கு எந்தவகையிலும் தான் காரணமில்லையென தெரிவித்துள்ளார் அமைச்சர் பைசர் முஸ்தபா.

எல்லை நிர்ணய அறிக்கையில் கையொப்பமிட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி ஜனவரி 17ம் திகதி வரை அவகாசம் கோரியுள்ள நிலையில் தான் எதையும் செய்ய முடியாது எனவும் ஐந்து பேரும் ஒப்பமிட்ட பின்னரே அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ள அதேவேளை, இம்முறை தேர்தலை பழைய முறைமையிலேயே நடாத்துவதற்கு அனைத்து கட்சித் தலைர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.